Skip to content
Home » இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

  • by Authour

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை கண்டுள்ளது.  இன்று  27 பைசா சரிந்து 86.31 என இந்திய ரூபாய் வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.86.31 என வீழ்ச்சி அடைவது இதுவே முதல் முறை ஆகும். கச்சா எண்ணெய் விலையில் வரலாறு காணாத உயர்வு, வெளிநாட்டு மூலதனம் தொடர்ந்து வெளியேறுதல் மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் எதிர்மறையான போக்கு உள்ளிட்டவை இந்திய ரூபாயின் சரிவுக்கு காரணம் என வர்த்தக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

டாலருக்கு நிகரான ரூபாயின் சரிவு இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என வர்த்தக துறையினர் கணித்துள்ளனர்.