அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளது. இன்று ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 84.40 பைசாவாக சரிந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றியை தொடர்ந்து, டாலரின் மதிப்பு, பிற நாட்டு கரன்சிகளின் மதிப்புக்கு எதிராக தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.