வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட முக்கொம்பு மேலணையில் திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஷ்ணு மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் ஆகியோர் முக்கொம்பு மழைக்கு வரக்கூடிய நீர் வரத்து குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் விஷ்ணு கூறும் போது…,
திருச்சி மாவட்டத்தில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் உள்ளார்த்து. மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என கூறினார்.
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கூறும் போது..
மாவட்டத்தில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்காக 1 லட்சம் காலி பைகள் மணல் மூட்டை நிரப்புவதற்கு தயாராக உள்ளது, 20 ஆயிரம் மணல் மூட்டைகள் மணல் நிரப்பப்பட்டு தயாராக உள்ளன.
தேவை இல்லாமல் ஆறுகளில் இறங்கி பாதுகாப்பு இல்லாமல் குளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில் 420 கிலோ மீட்டருக்கு தூர்வாரப்பட்டுள்ளது. அதிக மழை பெய்தால் ஒரு சில திருச்சி மாநகராட்சியில்
தாழ்வான பகுதிகளில் சற்று பாதிப்பு இருக்கும். அதனை மோட்டார் வைத்து தண்ணீரை அப்புறப்படுத்தும் வகையில் தயாராக உள்ளோம்.
விவசாயிகள் நிலங்களில் பாதிப்பு இருந்தால், எவ்வளவு பாதிப்பு என்பதை கணக்கிட்டு, அவர்களுக்கு நிவாரணம் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அவசர எண்ணுக்கு வந்த அழைப்புகளில் மாநகரில் ஒரு சில இடங்களில் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மோட்டார் வைத்து அதனை அகற்ற நடவடிக்கை எடுத்து உள்ளோம்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 178 ஏரி குளங்களில், 16 ஏரிகள் 70% நிரம்பியுள்ளது 28 ஏரிகள் 50 சதவீதம் நிரம்பியுள்ளது. 49 ஏரிகள் 25 சதவீதம் நிரம்பி உள்ளது. 39 ஏரிகள் நீர் இல்லாமல் காணப்படுகிறது. மழை வெள்ளம் பாதிப்பு குறித்து எந்தவித வதந்திகளையும் பரப்ப கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்ற ஏர் இந்தியா விமானம் கோளாறு ஏற்பட்டது குறித்து, பொறியியல் கோளாறு என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விரிவான அறிக்கை இன்னும் கொடுக்கப்படவில்லை என கூறினார்.