ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் அர்த்த மண்டபத்துக்குள் செல்ல முயன்ற இசையப்பாளர் இளையராஜாவை தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இளையராஜா அதற்கு மறுப்பு தெரிவித்து தனது x-தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது.. என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றனர். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல. விட்டுக்கொடுக்கவும் இ ல்லை. என இவ்வாறு தெரிவித்துள்ளார்.