அரை குறை ஆடைகளுடன் அடிக்கடி போஸ் கொடுத்து டிரோல்களுக்கு ஆளாகி அதன்மூலமே புகழ்பெற்றுவிட்டார் உர்பி ஜாவித். தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து உர்பி ஜாவித் ஹியூமன் ஆப் பாம்பேயிடம் கூறியதாவது:
லக்னோவில் பிறந்து வளர்ந்த நான் டாப்ஸ் மேல் ஓவர் கோட் போட்டு தான் வெளியே செல்வேன். ஆனால் எனக்கு 15 வயசு இருக்கும்போது எனக்கே தெரியாமல் என்னுடைய போட்டோவை யாரோ ஆபாச வெப்சைட்டில் பதிவேற்றிவிட்டார்கள். இந்த தகவல் என்னுடைய உறவினர்கள் மூலம் என் தந்தையின் காதுக்கு சென்றது. அப்போது அவர் என்னை அடித்து துன்புறுத்தினார்.
இத்தனைக்கும் அது என்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட நார்மலான புகைப்படம் தான். ஆனால் அதனை புரிந்துகொள்ளாத என் தந்தை, என்ன ஆபாச படத்துல நடிக்கப்போறியா என கேட்டு என்னை பெல்டால் அடித்து சித்ரவதை செய்தார். அவரால் நான் உடல் அளவிலும், மனதளவிலும் மிகவும் பாதிப்புக்கு உள்ளானேன்.
ஆபாச தளத்தில் என் புகைப்படம் வந்த பிறகு அவர் என்னை ஆபாச நடிகை என்று தான் அழைத்து வந்தார். இந்த மாதிரி நடிக்கிறதுக்கு 50 லட்சம் தாராங்களாமே நீ எவ்வளவு காசு வாங்குன என கேட்டு டார்ச்சர் செய்தார். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு 2 ஆண்டுகள் சமாளித்தேன். ஒருகட்டத்தில் தந்தையின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்யவும் முயன்றேன். அதையும் என்னால் சரியாக செய்ய முடியவில்லை. இதையடுத்து 17 வயதில் நான் வீட்டை விட்டு வெளியேறி மும்பைக்கு ஓடி வந்தேன்.
அங்கு சின்னத்திரை சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தேன். அப்போது பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் என் வாழ்க்கையே மாறிவிடும் என நினைத்தேன். ஆனால் அதிலிருந்து ஒரே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்டேன். இருந்தாலும், தற்போது தனக்கு கிடைத்திருக்கும் இந்த புகழுக்கு காரணம் அந்த ஒரு வார பிக்பாஸ் வாய்ப்பு தான்” என கூறினார்.
உர்பி ஜாவித் ஆடைகளுக்காக அடிக்கடி டிரோல் செய்யபடுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் “எனது ஒழுக்கம் மற்றும் குணநலன் குறித்து என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இணையத்தில் முகம் தெரியாதவர்களின் கருத்துக்களைப் பற்றி கவலைப்படாமல், நான் எனது விருப்பத்தின் மூலம் இதனை செய்து வருகிறேன் என கூறினார்.