சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பிஎப்7 என்ற புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த வகை கொரோனா இந்தியாவிலும் 4 பேரை பாதித்துள்ளது. இதுவேகமாக பரவும் தன்மையுடையது என்பதால் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சோதனை நடத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
இன்றுமுதல் வெளிநாடுகளில் இரந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஆர்டி பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்படும். பூஸ்டர் டோசை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.