கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்டி மலையில் நடைபெற்ற 61 வது ஆண்டாக ஜல்லிக்கட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது, விழாவில் கலந்து கொள்ள 890 மாடுகள் டோக்கன் பெற்றன, இதில் நேரம் முடிவடைந்த நிலையில் 761 காளைகள் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டன, 129 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்காமல் திருப்பி அனுப்பபட்டன, ஜல்லிக்கட்டு விழாவில் 59 நபர்கள் காயம் அடைந்தனர், இதில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், போட்டி மாலை 5:15மணிக்கு நிறைவடைந்தது, விழாவை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர், ஜல்லிக்கட்டில் 21காளைகளை பிடித்த நாமக்கல் எருமைப்பட்டியை சேர்ந்த கார்த்திக் முதலிடம் பெற்றார்,இவருக்கு காளை மாடு மற்றும் வாசிங்மெசின் பரிசு வழங்கப்பட்டது, 7 காளைகளை பிடித்து திருச்சி சாந்தாபுரம் ரஞ்சித் 2 ம் இடம் பெற்றார்.