பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கேஎன் அருண் நேரு, லால்குடி பகுதியில் வாக்காளருக்கு நன்றி தெரிவித்தார். லால்குடிஒன்றியம் மாடக்குடி, , கீழவாடி ,வேலாயுதபுரம், மாந்துறை ,பம்பரம் சுற்றி, ஆங்கரை ,திருமங்கலம் ,அகலங்கநல்லூர், கீழப் பெருங்காவூர், வளவனூர், மகிழம்பாடி, நெய் குப்பை, புதூர் உத்தமனூர், ஆகிய கிராமங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் . அவருக்கு அனைத்து கிராமங்களிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பொதுமக்கள் ஏராளமான கோரிக்கை மனுக்களையும் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட எம்.பி. அருண்நேரு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று உறுதி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து அகலங்கநல்லூர் ஊராட்சி புதுத்தெருவில் ரூ 13 லட்சம்மதிப்பீட்டில்புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடையை அருண் நேரு எம்பி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மதிமுக மாவட்ட செயலாளர் சேரன், ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், நகர மன்ற தலைவர் துரைமாணிக்கம் ,ஒன்றிய செயலாளர்கள் சண்முகநாதன், சக்திவேல், பெரியய்யா ,மாவட்ட கவுன்சிலர்கள் தீபா சுதாகர் ,ஆதி நாயக ரவி,கலை இலக்கிய கழக மாவட்ட அமைப்பாளர் துரை கந்தசாமி, சார்பதிவாளர் விக்டோரியா, கள ஆய்வாளர் அபுபக்கர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ,திமுக நிர்வாகிகள்,கிராம மக்கள் கலந்து கொண்டனர்.