கரூர் மாவட்டம், குளித்தலையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் 750 காளைகளும் 450 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று வரும் ஜல்லிக்கட்டில் இது வரை 280 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்கள் 16 பேருக்கு காயம் ஏற்பட்டதில் ஜல்லிக்கட்டு மைதானத்தின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் 15 பேருக்கு உடனடியாக முதலுதவி செய்யப்பட்டது. லாரன்ஸ் எனும் வீரருக்கு வலது தோள்பட்டை நழுவியதால் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். ஆண்களை போல் பெண்களும் அதிக அளவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டை பார்த்து வருகின்றனர்.