சிங்கப்பூரில் இருந்து இன்று காலை திருச்சிக்கு இண்டிகோ விமானம் வந்தது. விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கியதும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் விமானத்தை ஆய்வு செய்தனர்.அப்போது விமானத்தின் சீட் பேனலில் ஒளித்து வைத்திருந்த ஒரு கவரை அதிகாரிகளை கைப்பற்றினர். அதில் தங்க சங்கிலி இருந்தது. அது 24
காரட் தரமுடையது. 310 கிராம் எடை இருந்தது. இதன் மதிப்பு ரூ. 17 லட்சத்து 7 ஆயிரத்து 170 ஆகும். இந்த சங்கிலி முழுமையாக செய்து முடிக்கப்படாத நிலையில் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளது .கடத்தி வந்த நபர் அதை ஏன் விமானத்திலேயே விட்டுச்சென்றார் என்பது தெரியவில்லை.