செப்டம்பர் 15ம் தேதி முதல் தமிழகத்தில் 1 கோடி குடும்பத்தலைவிகளுக்கு, மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை யார், யாருக்கு வழங்குவது என்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 தினங்களாக ஆலோசனை நடத்தினர். இன்று தமிழகம் முழுவதும் உள்ள கலெக்டர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசித்தார்.
இதன்படி மகளிர் உரிமைத்தொகை பெற சம்பந்தப்பட்ட குடும்ப தலைவிகள், தங்களுடைய ரேசன் கடைகளில் விண்ணப்பிக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் பெறும் மகளிருக்கு இந்த தொகை கிடைக்காது.
அதுபோல 5 ஏக்கர் நிலம் வைத்திருப்போருக்கும், சொந்தமாக கார் வைத்திருப்போருக்கும், அரசு பணியில் இருக்கும் மகளிருக்கும் இந்த தொகை கிடைக்காது.
பெண் எம்.எல்.ஏ,. பெண் எம்பிக்களுக்கும், 3600 யூனிட் மின்சாரம் பயன்படுத்துகிறவர்களும் இந்த உரிமைத்தொகை பெற முடியாது.
வீட்டு வேலை செய்பவர்கள், சிறு கடைகள் நடத்துபவர்கள், சிறு வியாபாரம் செய்கிற பெண்கள் இந்த உரிமைத்தொகை பெற தகுதி உடையவர்கள். இது தொடர்பாக தமிழக அரசு விரைவில் விரிவான விளக்கம் அதிகாரப்பூர்வமாக அளிக்க உள்ளது.