Skip to content

ரஜினி பற்றி பேச ஒன்றுமில்லை…. ஆர்எஸ்பாரதி…

  • by Authour

கரூர் வெங்கமேடு பகுதியில் தென்னிந்திய செங்குந்த மகாஜனம் மற்றும் செங்குந்தர் இளைஞர் பேரவை ஐம்பெரும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக செங்குந்தர் திருமண மண்டபம் திறப்பு விழா அதைத் தொடர்ந்து கைத்தறி நெசவாளருக்கு கௌரவிக்கும் நிகழ்ச்சி, பின்னர் கடந்த 2023-2024 கல்வியாண்டில் தேர்வில் வெற்றி பெற்ற செங்குந்தர் இன மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான வழக்கறிஞர்.ஆர் எஸ் பாரதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மருத்துவர் அணி தலைவரும்,திமுக செய்தி தொடர்பாளர் டாக்டர். கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர் எஸ் பாரதி தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் கோரிக்கைகள் முதலமைச்சர் பார்வைக்கு எடுத்துச் சென்று ஒவ்வொன்றாக நிறைவேற்றி தருவதாக கூறினார் .

மேலும் திராவிட இயக்கத்தையும், செங்குந்தரையும் பிரிக்க முடியாது எனவும், முதன் முதலில் அறிஞர் அண்ணா செங்குந்தர் மாநாட்டில் உரையாற்றியதை நினைவு கூறி பேசினார்.

அதைத் தொடர்ந்து விரைவில் திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் கட்டுவது தொடர்பாக அனைத்து கோரிக்கையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களும் வலியுறுத்தி ஒவ்வொன்றாக நிறைவேற்றி தருவதாக விழா மேடையில் பேசிய ஆர் எஸ் பாரதி வாக்குறுதி அளித்தார்.

அதைத் தொடர்ந்து கைத்தறி நெசவாக்களுக்கு விருதுகளை வழங்கியும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கியும், விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கியும் சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் மற்றும் செங்குந்தர் இளைஞர் பேரவையின் சார்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதில் ஏராளமான செங்குந்த இன மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதைத்தொடர்ந்து விழா மேடையில் இருந்து புறப்பட்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதியிடம் செய்தியாளர்கள் பேட்டி கேட்ட நிலையில் இங்கு பேட்டி வேண்டாம் என கூறினா்.

அதை தொடர்ந்து செய்தியாளர் நடிகர் ரஜினி திமுக மூத்த நிர்வாகிகள் பற்றி பேசியதற்கு விளக்கம் என கேட்டபோது ரஜினியை பற்றி பேச ஒன்றுமில்லை என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!