திருச்சி ஜங்ஷன் ஜங்ஷன் ரயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் நேற்று காலை ரயில்வே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு இருக்கையில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் போதையில் சாய்ந்து கிடந்தார். அருகில் அவரது செல்போன் கிடந்தது. அவரை எழுப்பி பார்த்த போலீசார் அந்த நபர் எழும்பாததால் அவரது பையை கைப்பற்றி அதை பார்த்தபோது அதில் ரூ.9 லட்சம் ரொக்கம் இருந்தது.
உடனே அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது அவர் திருச்சி ரயில் நிலையத்தில் சீனியர் டெக்னிஷியனாக வேலை செய்து வருவதும், அவரது பெயர் வெங்கடேசன்(38) என்பதும், அவரது மனைவி கோவை ரயில் நிலையத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
வெங்கடேசன் கோவையில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இதற்காக அவர் ரூ.9 லட்சத்தை எடுத்து சென்றபோது தான் போதையில் அவர் ரயில் நிலையத்தில் போதையில் மயங்கி கிடந்துள்ளார். அதன்பேரில் போலீசார் வெங்கடேசனின் மனைவியை திருச்சிக்கு வரவழைத்து அவரிடம் பணத்தை ஒப்படைத்து வெங்கடேசனுக்கு புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தனர்.
போலீசார் வெங்கடேசனை அழைத்து சென்று பணத்தை மீட்டு இருக்காவிட்டால் மர்ம நபர்கள் அவற்றை திருடிச்சென்றிருக்கலாம். ரயில்வே போலீசாரின் நடவடிக்கையால் ரயில்வே ஊழியரின் பணம் காப்பற்றப்பட்டது. இதனால் ரயில்வே ஊழியர் தம்பதியர் திருச்சி ரயில்வே போலீசாரை பாராட்டி நன்றி தெரிவித்து விட்டு சென்றனர்.