திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்து ஜீவா தெருவில் வசிக்கும் வெங்கடேசன்( 48). சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா கடைகளில் விற்பனை செய்தால் உடனே பறிமுதல் செய்து விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும். மேலும் சிறிய கடை முதல் பெரிய கடை வரை திடீர் சோதனையில் ஈடுபட வேண்டும் என திருச்சி மாவட்ட காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் சமயபுரம் காவல் நிலைய தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயசீலான் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சமயபுரம் ஜீவா தெருவில் வசிக்கும் வெங்கடேசன் வீட்டில் சந்தேகப்படும்படி மூட்டைகள் இருந்துள்ளது.
அதனை சோதனை செய்தபோது 80 பண்டல்களில் புகையிலையும், 60 பண்டல்களில் பான் மசாலாவும் இருந்துள்ளது. இதனை அடுத்து அவற்றை பறிமுதல் செய்து வெங்கடேசனை கைது செய்து சமயபுரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, பான் மசாலாவின் சந்தை மதிப்பு ரூ75 ஆயிரம் இருக்கும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.