ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்றது. இந்த தொடரை நடத்துவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய 3 மைதானங்களின் சீரமைப்பு பணிக்காக இந்திய மதிப்பில் சுமார் ரூ.504 கோடியை செலவிட்டிருந்தது. இது ஏற்கெனவே மதிப்பிட்ட தொகையைவிட 50 சதவீதம் அதிகரித்திருந்தது.
தொடர்ந்து போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் என ஒட்டுமொத்தமாக ரூ.868 கோடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முதலீடு செய்திருந்தது. ஆனால் இதுவரை பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்றதற்கு கட்டணமாக ரூ.52 கோடி மட்டுமே திரும்பி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டிக்கெட் விற்பனை, ஸ்பான்சர்கள் வாயிலாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பெரிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை. ஒட்டுமொத்தமாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தியதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரூ.738 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.