Skip to content

ரூ.71 லட்சம் ஹவாலா பணம்- கோவையில் பிடிபட்டது

  • by Authour

கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில்  போதை தடுப்பு போலீசார் வாகன சோதனை நடத்தினர்.  அப்போது ஆந்திராவைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் என்பவர்  மீது சந்தேகம் அடைந்து அவர்  வைத்திருந்த  பைகளை சோதனை போட்டனர்.  அப்போது அவர் வைத்திருந்த  பைகளில்  பார்சல்கள் இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது   கத்தை கத்தையாக பணம் இருந்தது.

பணத்தை எண்ணி பார்த்தபோது அதில் 71 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. அந்த பணத்தை அவர் கொச்சி கொண்டு செல்லும் வழியில் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.

இந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் பிடிப்பட்ட பணத்தையும் சிவப்பிரகாஷையும்  போலீசார் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.  இந்த பணம்  ஹவாலா பணம் என  தெரியவந்து உள்ளது. இந்த பணம் எங்கே இருந்து  வருகிறது. யாருக்காக கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து  வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கிறார்கள்.

 

error: Content is protected !!