Skip to content

கோவையில் ரூ.54.6 கோடியில் புதிய பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Authour

கோவை   மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் இன்று   மாவட்ட பொறுப்பு  அமைச்சரும், மின்துறை அமைச்சருமான   செந்தில் பாலாஜி  சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு  ரூ.54 கோடியே 60 லட்சம் மதிப்பில் முடிவுற்ற நலப்பணிகளை தொடங்கிவைத்தார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

கோவை  மாநகராட்சி 8வது வார்டு காளப்பட்டி பகுதியில்   காளப்பட்டி சாலை (NGP PETROL BUNK) முதல் சரவணம்பட்டி சாலை வரையுள்ள இணைப்பு சாலையில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிக்கு  இன்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது.  இதில்  கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மின்துறை அமைச்சருமான  செந்தில் பாலாஜி கலந்து கொண்டு  அடிக்கல் நாட்டினர்.

பின்னர் வார்டு 61க்கு உட்பட்ட சிங்காநல்லூர் குளத்தில், 15வது நிதி குழுவின் திட்டத்தின் கீழ் ரூ 4.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 எம்.எல்.டி.  குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் அமைச்சர் செந்தில் பாலாஜி  திறந்து வைத்தார். அடுத்ததாக கோவை மாவட்டம்,

 

கவுண்டம்பாளையம் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள, விளாங்குறிச்சியில், கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக  கட்டுமான பணிக்கான  அடிக்கல் நாட்டு விழா மற்றும்  சிங்காநல்லூர் பகுதியில் ரூ 29.92 கோடி மதிப்பில் புதிய 10 நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவும் நடந்தது. இதிலும் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், சித்தாபுதூர், வார்டு எண்கள் 63, 83 மற்றும் 67ல், ரூ 22.42 லட்சம் மதிப்பில், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை  அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி, கணபதி, வடக்கு மண்டலம் வார்டு எண் 28 மற்றும் 30ல்,  ரூ. 40 லட்சம் மதிப்பில், நியாய விலை கட்டிடம் மற்றும் புனரமைக்கப்பட்ட நகர்புற மையத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி  துவக்கி வைத்தார்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவை மாவட்ட ஆட்சியர்  பவன்குமார் ஜி. கிரியப்பனவர் ,  கோவை மாநகராட்சி மேயர் திருமதி ரங்கநாயகி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக  கலந்து கொண்டனர்

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி, கணபதி, வடக்கு மண்டலம் வார்டு எண் 28 மற்றும் 30ல்,  ரூ. 40 லட்சம் மதிப்பில், நியாய விலை கட்டிடம் மற்றும் புனரமைக்கப்பட்ட நகர்புற மையத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி  துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர்பவன்குமார் ஜி. கிரியப்பனவர், கோவை மாநகராட்சி மேயர்  ரங்கநாயகி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள்  திரளாக கலந்து கொண்டனர்..

error: Content is protected !!