Skip to content

பெங்களூரு இன்ஜினியருக்கு வந்த சோதனை- போலீசுக்கு வந்த விசித்திர வழக்கு

கர்நாடக மாநிலம் பெங்களூரு வயாலிகாவல் போலீஸ் சரக பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி பிந்துஸ்ரீ. இந்த தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கம்ப்யூட்டர் என்ஜினீயரான ஸ்ரீகாந்த், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். திருமணமான நாளில் இருந்தே தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது.

முதலிரவு அன்றே ஸ்ரீகாந்த்துக்கு அதிர்ச்சி தொடங்கி விட்டது.  மனைவி அதுக்கு ஊகூம் என்று கூறிவிட்டார்.  போகப்போக சரியாகிவிடும் என கருதிய ஸ்ரீகாந்த்துக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

ஏன் இப்படி செய்கிறாய் என கேட்டதற்கு குழந்தை பெற்றுக் கொள்ள  இஷ்டம் இல்லை.  , தத்தெடுத்து குழந்தையை வளர்க்கலாம் என்றும் பிந்துஸ்ரீ கூறினாராம். அதுமட்டுமின்றி தன்னை தொட முயன்றாலோ,   இரவில் நெருங்கி வந்தாலோ  தற்கொலை செய்து கொள்வேன், சாவுக்கு நீதான் காரணம் என  எழுதிவைத்துவிட்டு  சாவேன்  என்று  பிந்துஸ்ரீ மிரட்டினாராம்.

இதனால் தம்பதி இடையே தகராறு நாள்தோறும் அதிகரித்தது.  தற்போது ஸ்ரீகாந்துடன் வாழ பிடிக்காமல் தனது பெற்றோர் வீட்டில் பிந்துஸ்ரீ வசித்து வருகிறார்.

இந்த நிலையில், தனது மனைவி மீது வயாலிகாவல் போலீசில் ஸ்ரீகாந்த் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

பிந்துஸ்ரீக்கும்   எனக்கும்  2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது.  இதுவரை எங்களுக்குள் தாம்பத்யம் நடக்கவில்லை. குழந்தை பெற்றுக் கொண்டால், தனது அழகு கெட்டுப்போய் விடும், அதனால் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம்  என்று பிந்துஸ்ரீ கூறுகிறார். 60 வயதுக்கு பின்பு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும்  கூறினார். அதையும் மீறி அவரிடம் நெருங்கினால், என்னை தொட்டால், உங்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றும், என்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்றால் ஒரு முறைக்கு  ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டு தொல்லை கொடுக்கிறார், விவாகரத்து கொடுக்க வேண்டுமானால்   ரூ.45 லட்சம்  ரொக்கமாக கொடுத்தால்,  விவாகரத்து  தருகிறேன் என்கிறார்.

இவ்வாறு அந்த புகாரில் கூறி உள்ளார். அத்துடன் இது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும்  அவர் போலீசில் கொடுத்தார். அந்த வீடியோவை பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரிக்கலாம் என நினைத்த நேரத்தில், பிந்துஸ்ரீ  தரப்பிலும், அதே  போலீஸ் நிலையத்தில் புகார்  அளிக்கப்பட்டது.

அதில்,  நான்  விவாகரத்துக்கு ரூ.45 லட்சம் கேட்கவில்லை. என் கணவர் கொடுமை தாங்காமல் நான் பெற்றோர் வீட்டில் வசிக்கிறேன். என் திருமணத்திற்காக  செய்த செலவுத்தொகை ரூ.45 லட்சத்தை தான் கேட்கிறேன்.  விருப்பமில்லாத கணவருடன் சேர்ந்து குழந்தை பெற்று,  குழந்தை வாழ்வையும் கெடுத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அவருடன்  தாம்பத்யம் வைத்துக்கொள்ளவில்லை.  இதற்காகவே 60 வயதுக்கு மேல்  குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என கூறினேன் என்று கூறி உள்ளார்.

இருதரப்பு புகாரையும் பெற்றுக்கொண்ட போலீசார் இதில்  என்ன செய்வது என்று தெரியாமல்,  வழக்கறிஞரின் ஆலோசனையை பெற்று  அவர்களை  கோர்ட்டில் பார்த்துக்கொள்ளுங்கள், எங்களை விடுங்கள் என  கைகழுவி விட்டு விடலாமா என்று யோசிக்கிறார்களாம்.

error: Content is protected !!