திருச்சியில் கடந்த 03.07.2024-ந்தேதி அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட SIT சந்திப்பின் அருகே இரவு ரோந்து காவல் அதிகாரி மற்றும் ஆளிநர்கள் வாகன சோதனை செய்த கொண்டிருந்தபோது, அவ்வழியே சந்தேகத்திற்கிடமான முறையில் வந்தகாரினை சோதனை செய்தபோது, அதில் சுமார் 27 மூட்டைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களான ஹான்ஸ் 150 கிலோ, விமல் 90 கிலோ ஆக மொத்தம் 240 கிலோ மதிப்பிலான ரூ.4, லட்சம் குட்கா புகையிலை பொருள்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனடியாக மேற்படி குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குட்கா புகையிலை பொருள்களை கடத்தி வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த ஸ்ரீநாத் (39)-ஐ கைது செய்தும், அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரினை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
மேலும் குற்றவாளி ஸ்ரீநாத் என்பவரின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி குற்றவாளிகளை குண்டாசின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் திருச்சி மாநகரில் போதை பொருட்களான கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருள்களை கடத்தி விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர கமிஷர் காமினி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.