Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பங்குதாரரிடம் ரூ.35 லட்சம் மோசடி…. திருச்சி தொழிலதிபர் கைது….

திருச்சி, பாலக்கரை பகுதியைச் சேர்ந்த ஆண்டோ இன்பன்ட் பெஸ்டின் (36), இவரது நண்பர்கள் சகாயராஜ், ஞானசுந்தரி, ராஜாராம் (50) ஆகியோர் இணைந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருச்சி ஆர்ச்சம்பட்டி கிராமத்தில் குளிர்பான உற்பத்தி நிலையம் தொடங்கினர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இந்தத் தொழிலில் இருந்து பிற நண்பர்கள் விலகிக்கொள்ள ராஜாராம் தலா ரூ.35 லட்சம் பணம் தருவதாகத் தெரிவித்தாராம். இதை நம்பிய 3 பேரும் தொழிலில் இருந்து விலகியபோது பங்குத் தொகை கொடுப்பதற்கான சில ஆவணங்களை எழுதிக்கொடுத்த ராஜராம் கொடுக்க வேண்டிய தொகைக்கு காசோலையும் கொடுத்திருந்தார். ஆனால் வங்கியில் பலமுறை கேட்டும் அவர் பணம் கொடுக்கவில்லை. இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த மாதம் ஆண்டோ அளித்த புகாரின்பேரில் தலைமறைவாக இருந்த ராஜாராமை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!