தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் கோயிலுக்கு உரித்தான, வெள்ளை பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் சீதாலட்சுமி, அழகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்புச் செய்து வீடு, காலி மனையை அனுபவித்து வந்தனர். இந். நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்து சமய அற நிலையத் துறையின் உதவி ஆணையர் கவிதா முன்னிலையில், வருவாய்த் துறை, காவல் துறையினர் உதவியுடன் 16 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பாலைவனநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை சீல் வைத்து மீட்டு, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டது.
இதில் கோயில் செயல் அலுவலர் அசோக்குமார், தனி தாசில்தார் சங்கர், ஆய்வாளர் லட்சுமி, சர்வேயர் ரங்கராஜ், கோயில் எழுத்தர் சங்கரமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் குமார், வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் ஜோதி பாண்டியன் உட்பட இருந்தனர்.