தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 15 வது மத்திய நிதிக் குழு 2024-25 திட்டத்தின் கீழ் ரூ. 605 லட்சம் மதிப்பீட்டில் 100 சாலை பணிகளும், நகர்புற சாலை மேம்பாட்டுத் திட்டம் 2024-25ன் கீழ் ரூ. 710 லட்சம் மதிப்பீட்டில் 85 சாலை பணிகளும், தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பட்டுத் திட்டம் 2024-25ன் கீழ் ரூ. 281 லட்சம் மதிப்பீட்டில் 28 சாலை பணிகள்.
மாநில நிதி குழு 2024-25 திட்டத்தின் கீழ் ரூ. 68 லட்சம் மதிப்பீட்டில் 15 சாலை பணிகளும் என 228 சாலை பணிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் பேரில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு கடந்த 26. 02. 2024ம் தேதியன்று வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொது நிதியின் கீழ் ரூ. 73. 46 லட்சத்தில் 10 பணிகள் மேற்கொள்ள 01. 03. 2024ம் தேதியன்று வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பணிகளும் துவங்கப்பட உள்ளது. இவ்வாறு ஆணையர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.