ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் (Project Approval Board) 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதியில் 3 ஆவது மற்றும் 4 ஆவது தவணைத் தொகையான ரூ.1,138 கோடி தற்போது வரை வழங்கப்படாமல் உள்ளது. இத்தொகையை விரைவாக தமிழ்நாடு அரசுக்கு வழங்கிடுமாறு டில்லியில் ஒன்றிய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதானை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஸ் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். உடன் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குநர் த ஆர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
நிலுவை தொகை ரூ.1,138 கோடி வழங்ககோரி மத்திய அரசிடம் அமைச்சர் மகேஷ் மனு….
- by Authour
