தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2024ஆம் ஆண்டு தை பொங்கலுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன் பொங்கல் நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன்கள் நேற்றுவரை வழங்கப்பட்டன.
இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு ரூ.1,000 ரொக்கத்துடன் வேட்டி – சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பரிசுத் தொகுப்பை வழங்கும் நிகழ்வினைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஜன.10 ஆம் தேதி முதல் ஜன.13 ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் பொங்கல் தொகுப்பை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்; ஜன.13ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பை பெற முடியாதவர்கள், ஜன.14ஆம் தேதி பெறலாம். தமிழகத்தில் உள்ள 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.