தமிழக அரசு ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு சார்பாக ரூ. 1,000 வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தி போலியானது என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. விஏஓ அலுவலகத்தில் ஆவணங்களை அளித்தால் வங்கி கணக்கில் ரூ.1000 நிவாரணம் என்பது பொய்யான செய்தி. தவறான தகவலை பரப்புவோர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையர் கூறியுள்ளார்.