சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவினர் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். இதில் 3 பயணிகள், உரிய அனுமதியின்றி வெளிநாட்டு தயாரிப்பு ஊக்க மாத்திரைகளை 407 பாக்கெட்டுகள் கொண்டு வந்தது தெரியவந்தது. அது குறித்து சுங்கத்துறையினர் மேற்கொண்ட
விசாரணையில், அவை ஸ்விட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட விலை உயர்ந்த ஊக்க மாத்திரைகள் எனத் தெரியவந்தது. அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து, 3 பயணிகளிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளின் மொத்த மதிப்பு ரூ. 1.37 கோடி என சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.