Skip to content

பர்த்டே பார்ட்டியில் கரூர் ரவுடி கொலை

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தொழிற்பேட்டை பகுதியில் பல்வேறு வழக்கில் தொடர்புடைய ரவுடி சந்தோஷ் குமார் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். நேற்றிரவு கரூர் தொழிற்பேட்டையில் பெயிண்டரான சுரேஷ் என்பவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.  இந்த நிகழ்ச்சியில் பிரகாஷ், சந்தோஷ் குமார் , மற்றொரு சந்தோஷ் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்பொழுது சந்தோஷ் குமாருக்கும் பிரகாசுக்கும் வாய் தகராறு ஏற்பட்டு மது போதையில் இருந்ததால் பீர் பாட்டலால் பிரகாசை சந்தோஷ் குமார் தாக்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது. சந்தோஷ் குமார் தாக்கியதில் பிரகாசுக்கு மண்டை உடைந்து ரத்தம் சொட்ட, சொட்ட அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முதலுதவி சிகிச்சை முடிந்தவுடன் அவர் வீடு திரும்பிய நிலையில் கரூர் தொழில் பேட்டை அருகே உள்ள குழந்தை இயேசு பள்ளியில் அருகே நின்று கொண்டிருந்த சந்தோஷ் குமாரை பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சந்தோஷின் உடலை பசுபதி பாளையம் போலீசார் கைப்பற்றி காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இக்கொலைக்கு காரணமான பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்களை பசுபதிபாளையம் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!