திருச்சி அடுத்த மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் மாதவன், பிரபல ரவுடி. இவர் மீது திருச்சி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் இன்று காலை மாதவன் திருச்சி திருவானைக்காவல் சன்னதி தெரு அருகே உள்ள ஒரு தோட்டத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
