திருச்சி சிந்தாமணி, பூசாரி தெருவைச் சேர்ந்தவர் சரோஜா (எ) கதிஜா (68), இவரது மூத்த மகன் பன்னாடை (எ) அக்பர்கான் (41). கடந்த 24ம் தேதி இவ்விருவருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. இதில் கதிஜாவின் இளைய மகன் தாவூத்க்கான் தலையிட்டதால், அக்பர்கான் அவரை தன் சகோதரர் என்று கூட பாராமல் கத்தியால் கழுத்தில் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதில் காயமடைந்த தாவூத்கான் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் கதிஜா அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பன்னாடை (எ) அக்பர்கானை பயங்கர ஆயுதங்கள் கொண்டு தன் சகோதரரை தாக்கியதாக கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கைதான அக்பர்கான் சரித்திரபதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.