கஞ்சா -போதை மாத்திரைகள் விற்பனை..
திருச்சி உறையூர் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உறையூர் போலீசார் நவாப் தோப்பு பகுதியில் சோதனை நடத்த சென்ற பொழுது அங்கு மூன்று வாலிபர்கள் போலீசார் வருவதை பார்த்து அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.அதில் ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்த போது அவர் பெயர் மணிகண்டன் ( 25) தில்லைநகர் காந்திபுரத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.மணிகண்டன் ரவுடி பட்டியலில் உள்ளார். மேலும் அவரிடமிருந்து போலீசார் சோதனை நடத்தி 1,100 கிராம் கஞ்சா மற்றும் 5 போதை மாத்திரைகள் இரண்டு ஊசிகள் இருந்ததை கைப்பற்றி உள்ளனர்.மேலும் இந்த சம்பவத்தில் போலீசாரை பார்த்து பயந்து ஓடிய பாலக்கரை காஜா பேட்டை பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (25) என்ற ரவுடியும் ஜிஜூ என்ற வாலிபர்ரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீரங்கத்தில் டூவீலரை திருடிய 2 பேர் கைது…
திருச்சி, ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜி (வயது 35)இவர் வீரேஸ்வரம் பகுதியில் பேட்மிட்டன் பயிற்சி மையம் நடத்தி வருகிறார் இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜி தனது இருசக்கர வாகனத்தில் பயிற்சி மையத்திற்கு வந்தார்.இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பயிற்சி மையத்திற்கு சென்ற அவர் பிறகு மீண்டும் இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்த போது காணவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜி திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமா இரு சக்கர வாகனத்தில் சென்ற திருவனைக்காவல் காந்தி ரோடு பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 20)பாலு (வயது 18) ஆகிய இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்தபோது மேற்கண்ட இருவரும் ராஜிஇருசக்கர வாகனத்தை திருடியது தெரிய வந்தது இதை எடுத்து திருவரங்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜ் பாலு ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர் அவர்களிடம் இருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.