Skip to content

டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த ரவுடி கைது… திருச்சி மாவட்ட க்ரைம்..

டாஸ்மாக்  ஊழியரிடம் பணம் பறித்து ரவுடி கைது..

திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானியா தெருவை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (55. ) தென்னூர் டாஸ்மாக்கில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று கடையில் இருந்தபோது அங்கு வந்த தென்னூர் வாமடம் சப்பாணி கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். இவர் தர மறுக்கவே விக்னேஷ் அவரது சட்டை பையில் இருந்த ரூ. 2 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு அரிவாளை காட்டி மிரட்டி பறித்து கொண்டு தப்பினார். இது குறித்து யோகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சரித்திர பதிவேடு ரவுடியான விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ரூ.500 பணம் மற்றும் ஒரு அரிவாளை பறிமுதல் செய்தனர்.

காந்தி மார்க்கெட் பகுதியில் சிறுவனை தாக்கிய வாலிபர் கைது.

திருச்சி வரகனேரி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவருக்கும் வரகனேரி ரம்பகார தெருவை சேர்ந்த சிவகுமார் (வயது 23, வரகனேரி சந்தனபுரத்தைச் சேர்ந்த இம்ரான் கான் (வயது 20) மற்றும் சதீஷ் ஆகியோருடன் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த 3 பேரும் நேற்று 17 வயது சிறுவனின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அவரை கம்பி மற்றும் கூர்மையான ஆயுதங்களாலும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சிறுவன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து இம்ரான் கானை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருடன் இருந்த சிவகுமார் மற்றும் சதீஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மது வாங்குவதில் தகராறு …. ரவுடி, வாலிபர் இடையே மோதல்

திருச்சி, இபி ரோடு காமராஜ் நகரை சேர்ந்தவர் பிரசாந்த் 30 ந்தேதி கோணக்கரை டாஸ்மாக்கில் மது வாங்கிக் கொண்டிருந்தார், அப்போது இவருக்கும் உறையூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ரவுடியான ராஜாவுக்கும் (வயது 46 ) தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இது குறித்து இருவரும் பரஸ்பரமாக அளித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த பெண் மாயம்

திருச்சி மாவட்டம் முசிறி மாவாலிப்பட்டி, மேற்கு தெருவை சேர்ந்தவர் ஆசைதம்பி 63. இவரது மகள் அங்கம்மாள் 38 மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்கள் மார்ச் 31ஆம் தேதி சிகிச்சைக்காக திருச்சி அரசு  ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கம்மாளை அங்குவிட்டு ஆசைதம்பி உணவு வாங்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அங்கம்மாள் மாயமானார். இது குறித்து ஆசை தம்பி அளித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து  அங்கம்மாளை தேடி வருகின்றனர்.

20 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி..

திருச்சியை அடுத்த மணப்பாறை, மஞ்சம்பட்டியை சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 45) கொத்தனார். கடந்த 1.5 ஆண்டுகளாக எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளி கட்டுமான பணிகள் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 27ந்தேதி வேலையின்
போது பாக்யராஜ் 20 அடி உயரத்தில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று பாக்யராஜ் சிகிச்சை பலனின்றி பரிதபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி சீதாமேரி அளித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை…..

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 55 )கொத்தனார். மது பழக்கத்திற்கு அடிமையானவர். ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியன் மகன் சரிவர வேலைக்கு செல்லவில்லை என தெரிகிறது. இதில் மன உளைச்சலில் இருந்து வந்த சுப்பிரமணி கடந்த மார்ச் 26ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது உறவினர் தமிழ்வண்ணன் அளித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

 

திருச்சியில் அனுமதியின்றி மது விற்ற முதியவர் கைது..

திருச்சி, ஓயாமரி மயானம் அருகே அனுமதியின்றி கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பதாக கோட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், நெற்குப்பை வெள்ளாளர் தெருவை சேர்ந்த கிரிதரன் ( 60) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 17 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவருடன் இருந்த சுகுமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!