திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் அண்ணா நகரை சேர்ந்த கணேசன் மகன் முத்துப்பாண்டி (26). இவர் மீது அடிதடி, வழிபறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவன் ரவுடி பட்டியலிலும் உள்ளார். இந்த நிலையில் முத்துப்பாண்டி அண்மையில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவன் மீது குண்டாஸின் கீழ் வழக்கு பதிவு செய்ய திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் முத்துப்பாண்டி மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
பிரபல ரவுடியை குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…
- by Authour
