திருவெறும்பூர் எஸ்.ஐ. அருண் குமார் மற்றும் போலீசார் காட்டூர் அம்மன் நகர் பகுதியில் ரோந்து சென்றனர் பிரபல ரவுடியான காட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தமிழ் (எ)தமிழரசன் (40) நாட்டு துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு அந்த வழியாக வருவோரை மிரட்டி கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில்போலீசார் அங்கு சென்று பார்த்த போது தமிழரசன் போலீசாரை கண்டதும் துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
தமிழரசனை திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.