புதுக்கோட்டை காமராஜபுரம் 20ம்வீதியைச்சேர்ந்த மாரிமுத்து மகன் சசிகுமார்(33) இவர் வடக்குராஜவீதியில்
உள்ள டாஸ்மாக் கடை பாரில் நேற்று மாலை மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிக்கும்போது
டவுன் நத்தம் பள்ளம் பகுதியைச் சேர்ந்த குணா என்ற குணசேகரன்(25) என்பவரும் இருந்தார். அப்போது இருவருக்கும் முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது.
அப்போது குணாவின் கூட்டாளிகள் கார்த்திக்(23), திருச்சி சரண்ராஜ்(19), மச்சுவாடி பார்த்திபன்(20), சிவபுரம் பார்த்தா, காமராஜபுரம் சூர்யா(21) ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து சசிகுமாரை தாக்கினர். அவர் உயிர் பிழைக்க தப்பி ஓடினார். ஆனால் குணசேகரன் கும்பல் , சசிகுமாரை ஓட ஒட விரட்டிச்ெசன்று வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். பின்னர் குணசேகரனும் அவனது கும்பலும் தப்பி ஓடியது.
பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய சசிகுமாரை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி புதுக்கோட்டை அரச ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரன் உள்பட 6 பேரையும் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் புதுகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.