கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ளது அய்யர்மலை. இங்கு 1178 அடி உயர மலை மீது ரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல வேண்டுமானால் 1017படிகள் ஏறிச்செல்ல வேண்டும். படிகள் ஏறிச்செல்ல பக்தர்கள் சிரமப்பட்டனர். எனவே பக்தர்கள் வசதிக்காக இங்கு ரோப்கார் வசதி செய்யப்பட்டது. இன்று ரோப்கார் சோதனை ஓட்டம் நடந்தது. இதில் அறநிலையத்துறை அதிகாரிகள், மற்றும் மாணிக்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர். வரும் 10ம் தேதி இந்த ரோப்கார் வசதி் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என தெரிகிறது.