திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்க தினந்தோறும் பக்தர்கள் வந்து முருகனை தரிசித்து சென்ற வண்ணம் உள்ளனர். மலை உச்சியில் உள்ள முருகனை தரிசிக்க 689 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். வயதானவர்கள், குழந்தைகள், மலைமேல் சென்று முருகனை தரிசிக்க வசதியாக ரோப்கார், இழுவை ரயில், வசதிகள் உள்ளனர்.
மக்கள் பெரிதும் விரும்பும் ரோப்கார் சேவை தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இதற்கு மாதம் 1 நாள் பராமரிப்பு விடுமுறை அளிக்கப்படும். வருடத்திற்கு 40 நாள் விடுமுறை அளிக்கப்படும். அப்போது ரோப்கார் பெட்டிகள் அனைத்து இறக்கப்பட்டு மீண்டும் பாதையை சீரமைத்து அதன் பிறகு 40 நாள் பராமரிப்பு முடிந்த பிறகு அதனை இயக்குவார்கள்.
வருடாந்திர பராமரிப்பு பணிகள் இன்று காலை தொடங்கியது. எனவே இன்று முதல் பழனி மலை கோவிலுக்கு செல்ல ரோப்கார் வசதி 40 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. 40 நாள் கழித்து மீண்டும் ரோப்கார் வசதி செயல்படும். அதுவரை மின் இழுவை ரயில், யானைப்பாதை, படிப்பாதைகளில் மக்கள் பயணித்து முருகனை தரிசிக்கலாம்.