Skip to content
Home » அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் வசதி…… முதல்வர் தொடங்கி வைத்தார்

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் வசதி…… முதல்வர் தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்டம் குளித்தலை யில் இருந்து மணப்பாறை செல்லும் பாதையில் உள்ளது அய்யர்மலை. இங்கு புகழ் பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 1170 அடி உயரத்தில் 1017 படிக்கட்டுக்களை கொண்டு மலை உச்சியில் அமையபெற்ற இந்த சிவ ஸ்தலமானது திருநாவுக்கரசரல் தேவாரம் படால் பெற்ற திருத்தலமாகும்.

மலை உச்சியில் செங்குத்தான படிக்கட்டுக்கள் அமைந்துள்ளதால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மலை உச்சியில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டு வந்தனர்.

அவர்களின் சிரமத்தினை போக்க  கடந்த 2011ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் ரூபாய் இரண்டு கோடி மதிப்பில் ரோப் கார்  அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கிடப்பில் போடப்பட்ட ரோப் கார் சேவை பணிகள் தற்போதைய திமுக ஆட்சி காலத்தில்  மீண்டும் முடுக்கிவிடப்பட்டு நிறைவடைந்தது.

கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூபாய் 9.10 கோடி மதிப்பில் ரோப் கார் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், காத்திருப்போர் அறை ஆகியவற்றின் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை அடுத்து தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக  ரோப் கார் வசதியை இன்று தொடங்கி  வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ,எம்எல்ஏ மாணிக்கம் ஆகியோர் ரோப்காரில் பயணம் மேற்கொண்டனர்.

ரோப் கார் சேவை துவங்கியதை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சியுடன் ரோப் காரில் பயணம் செய்து மலை உச்சியில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

ரோப் கார் சேவையானது ஒரு வழியாக செல்வதற்கு 50 ரூபாய் கட்டணமும், இரு வழி பயணம் மேற்கொள்ள நூறு ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!