கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலையில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் 1017 படிகள் உயரம் கொண்டதாகும். கோவிலில் ரூ.6 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் ரோப் கார் பணி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் பணிகள் நிறைவு பெற்று சோதனை ஓட்டம் வருகின்ற 10.06.2024 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் சேவையை குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
