புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் அருகே பிரசித்திபெற்ற ஓனாங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பங்குனி தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் கிராமத்து இளைஞர்கள் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்
அதன்படி இன்று நடைபெற்ற வடமாடு போட்டியில் திருச்சி, சிவகங்கை, மதுரை, ஆகிய மாவட்டங்களிலிருந்து 12-காளைகளும் 100 – க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டனர்இதில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியை அரிமழம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்