விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு ‘கொலை’ படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானது முதல் ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த விஜய் ஆண்டனி, முதல்முறையாக இந்த படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடிக்கிறார். இந்த படத்தை விநாயக் வைத்தியநாதன் என்பவர் இயக்கவுள்ளார்.
விஜய் ஆண்டனி மற்றும் குட் டெவில் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கவுள்ளனர். ‘ரோமியோ’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.