இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விரோட் கோலி. அவர் உலக கோப்பை ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித்துடன் களம் இறங்குகிறார். ஆனால் உலக கோப்பை போட்டியில் அவர் சோபிக்கவில்லை. நேற்று அரை இறுதிப்போட்டியில் 9 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.
அதற்கு முந்தைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் 5 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். மொத்தத்தில் 7 ஆட்டங்களில் ஆடி 75 ரன்கள் மட்டுேம எடுத்து உள்ளார். இதில் அதிகபட்சமாக ஒரு ஆட்டத்தில் 24 ரன்கள் எடுத்து உள்ளார்.
விராட்கோலியின் இந்த ஆட்டம் குறித்து நேற்று போட்டி முடிந்ததும் கேப்டன் ரோஹித்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
விராட் ஒரு தரமான வீரர். அவரது திறமையில் எந்த சந்தேகமும் இல்லை. 15 வருடங்கள் விளையாடும் போது, பார்ம் ஒரு பிரச்சனையாக இருக்காது. அவர் அதை இறுதிப் போட்டிக்காக சேமித்து வைத்திருக்கலாம். இறுதிப் போட்டியின் சந்தர்ப்பத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நாங்கள் அமைதியாக இருப்பது முக்கியம். ஏனெனில் இது நல்ல முடிவுகளை எடுக்க உதவுகிறது. நாங்கள் மிகவும் நிதானமாகவும், அமைதியாகவும் இருந்தோம். அதுவே எங்களுக்கு முக்கியமாகும். எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம். இறுதிப்போட்டியில் இன்னொரு சிறப்பான ஆட்டத்தை நடத்துவேன் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.