நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ரோகித் தலைமையிலான இந்திய அணி. இந்தப் போட்டியில் 76 ரன்கள் எடுத்த கோலி, ஆட்ட நாயகன் விருதை வென்றார். அதன்போது இதுவே தனது கடைசி சர்வதேச டி20 போட்டி என அவர் அறிவித்தார். தொடர்ந்து அவர் “இதுதான் எனது கடைசி டி20 உலகக் கோப்பை தொடர். இதைத்தான் நான் சாதிக்க வேண்டும் என விரும்பினேன். ஒரு நாள் ரன் எடுக்க முடியாது என்ற எண்ணம் உங்களுக்கு வரும். கடவுள் மிகப் பெரியவர். இப்போது இல்லை என்றால் எப்போது என்ற தருணம் எங்களுக்கு இது. இந்திய அணிக்காக நான் விளையாடும் கடைசி டி20 போட்டி இதுதான். விராட் கோலி ஓய்வு முடிவை அறிவித்த சில மணிநேரத்தில், அவருடைய நீண்டகால சக வீரரான ரோகித்தும் ஓய்வு முடிவு பற்றி தெரிவித்து உள்ளார்.
