பொதுவாக ஒரு திரைப்படத்தின் இசையமைப்பாளர் அந்த திரைப்படத்திற்கான பின்னணி இசையமைக்கும் போது அல்லது பாடலை தயார் செய்யும் போது பெரிதளவில் இயக்குனர்கள் இசையமைப்பாளரின் ஸ்டூடியோ விற்கு சென்று அமர்ந்து இசையை கேட்டுவிட்டு அப்படி இப்படி வேண்டுமென்று கேட்பார்கள். ஆனால், லோகேஷ் கனகராஜ் இவரை அனிருத்துடன் பணியாற்றிய மாஸ்டர் படத்தை தவிர விக்ரம் மற்றும் லியோ ஆகிய இரண்டு படங்களுக்குமே ஸ்டுடியோவிற்கு செல்லாமல் அவரை நம்பி படத்தை முழுவதுமாக கொடுத்து விட்டாராம்.
மாஸ்டர் திரைப்படத்தில் தான் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் ஒன்றாக பணியாற்றினார்கள். அந்த படத்திற்காக மட்டும் தான் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக லோகேஷ் கனகராஜ் அனிருத்தின் ஸ்டுடியோவிற்கு வந்து தனக்கு இந்த மாதிரி பாடல்கள் இந்த மாதிரி பின்னணி இசை வேண்டும் என்று கேட்டு வாங்கினாராம் .
அதன் பிறகு இருவரும் விக்ரம் படத்திற்காக இணைந்தனர். அந்த திரைப்படத்தின் பாடல்களுக்கும், பின்னணி இசைக்காகவும் அனிருத் ஸ்டுடியோவிற்கு லோகேஷ் கனகராஜ் வரவே இல்லயாம். பிறகு ஒரு முறை அனிருத் நீங்க தான் இந்த படத்திற்கு இயக்குனர் என்னிடம் இசையை பற்றி எதாவது கேளுங்கள். உங்களுக்கு இந்த டியூன் பிடித்திருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை என லோகேஷிடம் கேட்டாராம்.
அதற்கு லோகேஷ் கனகராஜ் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் என்று போட்டுவிட்டாச்சு எனவே நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் படத்தை காப்பாற்றி கொடுப்பீர்கள் என்றும் கூறிவிட்டாராம். விக்ரம் படத்திற்கு இப்படி சொன்னதை போல தான் லியோ படத்திற்கும் லோகேஷ் கூறியுள்ளாராம்.
எனவே, லோகேஷ் ஸ்டுடியோவிற்கு சென்று கேட்காமல் அனிருத் மீது முழு நம்பிக்கையை வைத்து லியோ திரைப்படத்தை கொடுத்துவிட்டாராம். அந்த நம்பிக்கைக்காகவே தீவிரமாக லியோ படத்தில் அனிருத் இசையமைத்துள்ளாராம். இந்த தகவலை அனிருத்தே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் லியோ படம் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.