சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி சினிமாவுக்கு வந்த ரோபோ சங்கர் நிறைய படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து கை நிறைய படங்கள் வைத்து பிஸியாக நடித்து வந்தார். விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், தனுசுடன் மாரி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என்று முன்னணி நடிகர்கள் படங்களிலும் காமெடி செய்து தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவும் சினிமாவில் நடிக்கிறார். விஜய்யின் பிகில், கார்த்தியுடன் விருமன் படங்களில் இந்திரஜா நடித்து இருக்கிறார். இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டு ரோபோ சங்கருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இந்திரஜா வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் ரோபோ சங்கர் உடல் மெலிந்து ஒல்லியாக ஆளே மாறிப்போய் இருப்பதாக அதிர்ச்சி வெளியிட்டனர். ரோபோ சங்கரின் மெலிந்த புகைப்படம் வலைத்தளங்களிலும் வைரலானது. அவருக்கு என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பினர். ரோபோ சங்கருக்கு உடல்நல பாதிப்பு எதுவும் இல்லை என்றும் ஒரு படத்துக்காக உடல் மெலிந்து இருக்கிறார் என்றும் குடும்பத்தினர் விளக்கம் அளித்து சமாளித்தனர். ஆனால் நண்பர்ளோ ரோபோ சங்கருக்கு மஞ்சள்காமாலை இருந்தது தெரியாமல் போய்விட்டது. சரியான நேரத்தில் கண்டுபிடித்ததால் உயிர் தப்பினார் அதற்கு சிகிச்சை பெற்றதால் தான் உடல் மெலிந்து விட்டது என்கின்றனர்..
Tags:ரோபோ சங்கர்