நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் தன் குடும்பத்துடன் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். பல்வேறு செல்லப்பிராணிகள் மற்றும் பறவைகளை ரோபோசங்கர் வளர்த்து வருகிறார். யூடியூப் சேனல் ஒன்றில் அவரது வீட்டில் வளர்க்கப்படும் அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளின் வீடியோ ஒன்று வெளியானது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் சோதனை நடத்திய வனத்துறை அதிகாரிகள் அனுமதியின்றி வளர்க்கப்பட்டு வரும் கிளிகளை பறிமுதல் செய்து கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைந்தனர். இந்நிலையில் உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்ததன் காரணமாக ரோபோ சங்கருக்கு வனத்துறையினர் ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.