திருச்சி தேசியக்கல்லூரியில் இன்று மாணவர்களுக்கான தன்னம்பிக்கை மற்றும் வாழ்வியல் வழிகாட்டுதலுக்குரிய சிறப்பு பயிலரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் கி. குமார் தலைமை தாங்கினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ராபின் சிங் இந்த பயிலரஙு்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
இளம் தலைமுறையினர், குறிப்பாக மாணவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை கட்டமைத்துக்கொள்ளவேண்டும். அதற்காக தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். நல்ல வழிமுறைகளோடு எதிர்கால தேடல்களை தொடங்கி அதனை பெற வேண்டும். இதற்கு தன்னம்பிக்கையை அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
போட்டிகள் நிறைந்த இந்த உலகில் ஒவ்வொருவரும் தத்தமது இருப்பினை தக்கவைத்துக்கொள்வதற்கும், தங்களுக்குரிய சவால்களில் உயர்வதற்கும், இடைவிடாது முயற்சிக்க வேண்டும். அதற்கு பயிற்சியும் தேவை.
இவ்வாறு அவர் பேசினார். பின்னர் மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி நன்றி கூறினார். பயிலரங்கில் ஏராளமான மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.