நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு பகுதியை சேர்ந்த அருண்பிரகாஷ்(32) என்பவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.அவரது தோட்டத்து வீட்டில் தற்போது அவரது மனைவி அருள்பிரியா(30),தந்தை செல்வகுமார்(60), தாய் விஜயலட்சுமி(55), ஆகியோர் வசித்து வருகின்றனர்.
அவரது தோட்டத்து வீட்டிற்கு இன்று அதிகாலை 2 மணி அளவில் 2 கார்களில் 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் வந்தனர். வீட்டின் முன் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து விட்டு இரும்பு கேட்டிற்குள்
நுழைய முயன்றனர். அப்போது அருண் பிரகாஷ் மனைவி அருள்பிரியா மர்ம நபர்களை பார்த்து கூச்சல் போட்டார்.
இதனால் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்து ஆயில்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்ப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் தப்பி சென்ற கும்பலை பிடிப்பதற்காக ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். அருண் பிரகாஷ் சேலத்தில் வசித்து வரும் நிலையில் தோட்டத்து வீட்டில் அவரது பெற்றோர் மட்டும் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.