முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. மேலும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வர ரோப் கார், மின் இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் உள்ளன. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப்கார் உள்ளது. இந்நிலையில் பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை பழுது ஏற்பட்டதால் பக்தர்கள் அவதிகுள்ளானார்கள். ரோப்கார் சேவை பழுதால் பக்தர்கள் மின் இழுவை ரயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து அவதி அடைந்துள்ளனர்.
