திருச்சி மாநகராட்சி 14வது வார்டு மலைக்கோட்டை அருகே பாபு ரோடு உள்ளது. இந்த வார்டின் மாமன்ற உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த அரிவிந்தன் உள்ளார். இச்சாயைில் கடந்த 2 ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தி தர கவுன்சிலர் அரவிந்தன் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் கொடுத்தனர். திருச்சி 14வது வார்டு பொதுமக்கள் அதிமுக கவுன்சிலர் அரவிந்தனை கண்டித்து திருச்சி இபி ரோடு முருகன் தியேட்டர் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் மலைக்கோட்டை கோட்ட தலைவர் வெங்கடேஷ் காந்தி தலைமை வகித்தார். இதில் மாநகர மாவட்ட பொருளாளர் முரளி. 4-A வார்டு தலைவர் ஆரிப் வார்டு பொது செயலாளர்கள் அகமதுல்லா, மலர்கொடி, சுகன்யா, சாந்தா மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.