அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 23.01.2025 நேற்று “36வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு” (ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக கொண்டாடப்படுகிறது) சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாணவிகளுடைய ஓவிய போட்டி, பேச்சு போட்டி, நடன போட்டி, இசைப் போட்டி மற்றும் நாடக போட்டி முதலியவை நடைபெற்றன. இதில் கல்லூரி மாணவ மாணவிகள் பெரும்பாலானோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாக அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அஜித் குமார் மற்றும் போக்குவரத்து காவலர்கள் உடன் இருந்தனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை, அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
டாக்டர்.தீபக் சிவாச் நேரில் அழைத்து பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார்.
பின்னர்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் கூறியதாவது, மாணவர்கள் சாலை பாதுகாப்பு விதிகளை குறித்து பெற்றோர்கள் மற்றும் தனது நண்பர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் படிப்பில் கவனம் செலுத்தி சமூகத்தில் நல்ல நிலையில் வர வேண்டும் என்று கூறினார்.
இந்நிகழ்வின் போது அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், உதவி ஆய்வாளர் அஜித் குமார், தனி பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உடன் இருந்தார்கள்.